புலிக்கு பிறந்தது ஒருகாலமும் பூனை ஆகாது. பன்முக கலைஞனுக்கு பிறந்தவர் ஒரு கலை மட்டுமா பயின்றிருப்பார்? அப்பா கமலை போலவே டைரக்ஷன், நடிப்பு என சினிமாவின் பல துறைகள் மீது ஆவலும், காதலும் கொண்டிருக்கிறார் குட்டி சுட்டி இளைய மகள் அக்ஷரா ஹாசன்.
மும்பையில் அம்மாவுடன் ஒட்டி இருந்ததால் என்னவோ, தமிழ் கொஞ்சம் தத்தித்தத்தி தான் வருகிறது. பாலிவுட்டில் அமிதாப், தனுஷுடன் கைக்கோர்த்த இவர், தமிழில் அஜித் குமாருடன் இணைந்து விவேகத்தில் பணியாற்றியுள்ளார்.
நடிப்பு என வந்துவிட்டால் ஃபேஷன் மட்டும் இல்லாமல் போய்விடுமா? அக்கா ஸ்ருதி ஹாசன் போல ஃபேஷனிலும் அம்மணி கெட்டி தான்.
பஞ்சுமிட்டாய்!
பிங்க் நிற பாட்டம் மற்றும் கருப்பு நிற ஜாக்கெட் உடையில் கியூட் அக்ஷரா ஹாசன். கொஞ்சம் குட்டியாக, ஒல்லியாக இருப்பதால் நேவல் தெரியும்படியான உடையும் இவரை கியூட்டாக காட்டுகிறது.
கருப்பு, வெள்ளைப் பூ!
முந்தைய படத்தில் கண்டது போன்ற அதே மாதிரியான நேவல் தெரியும்படியான உடை தான். கருப்பு நிற பாட்டம் மற்றும் வெள்ளை நிற புல்ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து கொள்ளை அழகுடன் அக்ஷரா.
மியாவ் பூனை!
கருப்பு நிற சில்வர் க்ளிட்டரிங் புல் கவுன் உடையில் சிக்கென்ற அழகுடன் அக்ஷரா ஹாசன்.
டாம் பாய்!
ஜீன் பேன்ட், ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் உடையில் போட்டோஷூட் ஒன்றில் அக்ஷராவின் அசத்தல் போஸ்.
பார்டி!
பார்டி ஒன்றில் சிவப்பு நிலா ப்ளாக் செக்குடு புல்ஸ்லீவ் கேசுவல் உடையில் அக்ஷரா ஹாசன்.
பாசமலர்கள்!
அக்கா ஸ்ருதி ஹாசனுடன் தங்கை அக்ஷரா ஹாசன். பார்ட்டி ஒன்றில் இருவரும் கருப்பு நிற உடையில் எடுத்துக் கொண்ட செல்ஃபீ!
All Image Credit: Akshara Haasan / Instagram