Dinasari.com

ஆயுள் முழுவதும் மனைவியின் அரவணைப்பை தேடும் ஆண்கள்! – ஆய்வு முடிவு
செக்ஸ் தேவைக்காகவும், பெண்களைக் கவர்வதற்காகவும் ஆதிகால மனிதன் முதல் இந்த காலத்திய ஆண்கள் வரை எத்தனையோ வீர தீர செயல்களை செய்து தங்களைநிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் ஆண்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை லாபம்தான் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர்.

தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றியடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!

ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அதனால்தான் பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னி கேம்பெல். ஆனால், இதற்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்த அழகான பெண்களை எப்படியாவது ஈர்த்துவிட வேண்டி ஏதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!

ஆதிகாலத்தில் வேட்டையாடி உணவு கொண்டுவந்து தன்னை காப்பாற்றிய ஆணையே சிறந்த ஆண்மகனாக, உறவுக்கு ஏற்றவர்களாக பெண்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவனது சந்ததியை பரப்பவே பெண்களும் விருப்பம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் இங்கே பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் க்ரூகர்!

எனவேதான் இன்றைக்கும் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பணமதிப்பு, கவுரமான வேலை ஆகியவற்றைக் காட்டி பெண்களை கவரும் முயற்சியில் ஆண்கள் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேபோல் மரணம் வரையிலும் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறவு கொள்வதை பெரும்பாலான ஆண்களும் பெண்களும் விரும்புகின்றனர். இது தொடர்பான இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 75 முதல் 85 வயதுடைய நபர்களும் பங்கேற்றனர். ஆய்வின் போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வாரத்திற்கு ஒருமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேசமயம் உறவில் ஈடுபடாத தம்பதிகள் உடல் சோம்பியிருப்பதாக கூறினர்.

30 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியரை விட 55 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியர் உடல் ஆரோக்கியம் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது தெரியவந்தது. வயதானாலும் இறுதி காலம் வரை ஆரோக்கியத்தைப் பொருத்து உறவில் ஈடுபடவே பெரும்பாலான தம்பதியர் விரும்புகின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நெற்றிப் பொட்டில் உள்ள ரகசியம்!
பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.

நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.

இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களில் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்கரிக்கின்றன. நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். எனவே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

நீளமான பொட்டு

வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்

இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

ஓவல் வடிவ முகம்

ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

முக்கோணப் பொட்டுக்கள்

முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை ‘சாறி புற்றுநோய்’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்’ என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

‘அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.

இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை’ என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.

டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்’ என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நீங்களும் சாதிக்கணுமா?
1. எதையும் தைரியமாக அணுகுங்கள்.

2. எதில் சாதிக்க வேண்டுமோ, அந்தத் துறையில் ஆர்வம் காட்டுங்கள்.

3. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் பயம் எட்டிப் பார்க்கக் கூடாது.

4. யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தக்கூடாது.

5. நம்மால் முடியும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

6. அம்மா, அப்பாவின் ஆதரவைப் பெறுங்கள்.

7. அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுங்கள்.

8. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.

9. திருமணம் ஆன பிறகும் கணவனுக்காக லட்சியத்தை கைவிட்டுவிட வேண்டாம்.

10. உங்களுக்கு கிடைக்கும் கவுரவங்கள் தலைக்கனமாக மாறிவிடக்கூடாது.

- பெண்கள் சாதிக்க, சாதனை மாணவி ஸ்வேதா சொன்ன அட்வைஸ்தான் இவை.

நீங்களும் அழகிதான்..!
பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்திருப்பதற்கு அரும்பாடுபடுவார்கள். அப்படி அழகாக இருப்பதற்கான சில டிப்ஸ்…

கண்

கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வேண்டுமாயின் வெள்ளரிக்காய் சாற்றை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் வைத்து வரவும்.

உதடு

உதடு வசீகரமாக இருக்க வேண்டுமா? முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் ஆகிய மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவினால் கிடைத்துவிடும் வசீகரம்.

முகத்தின் எண்ணெய் பசை

முட்டையின் வெண்கரு 7 தேக்கரண்டி, தேன் கால் தே.க., மாதுளைச் சாறு அரை தே.க. போன்ற மூன்றையும் கலந்து, அரை மணி நேரம் வரையில் முகத்தில் பூசிவிட்டு பின்னர் கழுவினால் எண்ணெய் பசை ஓடிவிடும்.

முக வறட்சி

பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கும்.

கரும்புள்ளி

முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க சாதிக்காயை அரைத்துப் பூசுங்கள்.

முகப்பரு

பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசிவர நாளடைவில் பருக்கள் மறையும்.

வாய் நாற்றம்

புதினா கீரையைக் காய வைத்து தூளாக்கி அதனால் பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.

வெண்மையான பல்

இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மையும் பெறும்.

கை

பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாகும்.

நகம்

நகங்களில் சிதைவு ஏற்படாமலும் வெண்மையாகவும் இருக்க வேண்டுமாயின் சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

மார்பக பாதுகாப்பு

வெள்ளைக்குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு இட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் அழகான வடிவம் பெறும்.

வியர்வை நாற்றம்

ஆவாரம் பூவை உலர்த்தி, சமமான அளவு பயிற்றம் மா கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

உடல் பருமன்

பப்பாளிக்காயை பொரியலோ, குழம்போ வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதம்

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு தே.க., பன்னீர் இரண்டு தே.க., எலுமிச்சம் சாறு ஒரு தே.க. ஆகிய மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

இந்தக் குடும்ப வாழ்க்கை நம்மை கணவன் அல்லது மனைவி என்ற முறையில் கடைசிவரை கூட்டிச் செல்லும். எத்தனை இன்னல்கள், மனக் கசப்புகள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த எதிர் காலத்தைத் தரும்.

இவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையில் எவ்வகையில் பிரச்சினைகள் வரலாம் என்பதில் எந்த முன் அனுபவமும் இல்லாத எனது கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதில் முன் அனுபவம் உள்ள வாசகர்கள் இருப்பின், தவறுகளை அல்லது மேலும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

1) சந்தேகம்

தனிப்பட்ட ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியுமான சில விடயங்களும் சொல்ல முடியாத சில விடயங்களும் இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிலர் இதில் திறந்த புத்தகம். எல்லா விடயங்களையும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவார்கள். இவற்றில் இரு பாலாருக்கும் சந்தேகம் எவ்வாறு வரும் என்பது மிகவும் தொலைவில் உள்ள சிந்திக்கவே முடியாத ஒரு விடயம் அல்ல.

பொதுவாக இரு பாலாரும் எதிர் பாலாருடன் சகஜமாகப் பழகுவது இதற்குப் பெரிதும் வழி வகுக்கும். இதைக் குறைத்துக் கொண்டாலே இலகுவில் சந்தேகம் எனும் பிரச்சினையைத் தூக்கி எறிந்துவிட முடியும். அதிலும் முக்கியமாக, ஒருவர் மற்றவருக்கு “நீ இவ்வாறு அந்த நபருடன் பழகுவது எனக்குப் பிடிக்கவில்ல” என்று சொல்லத் தயக்கமாக இருக்கும்.

இதை மனதிலேயே பூட்டி வைத்து உள்ளுக்குள் நொந்துகொண்டு இருப்பார்கள். இது மேலும் தொடரும்போது, ஒருவர் மற்றவர்மீது வெகுவாக எரிந்து விழுவது போன்று, ஒரு வெறுப்பைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.

இந்த சமயத்தில் வேறு ஏதாவது தொடர்பற்ற விடயத்தில் சிறு பிரச்சினை வந்தால் கூட, அதை மையமாக வைத்து, இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிது படுத்தி விடுவார்கள். இத்துணைக்கும் அந்த நபரின் மனதில் கூட அவ்வாறு ஒரு எண்ணம் இருந்திரக்காமல் இருக்கலாம். இது போன்று பிரிந்த எத்தனை குடும்பங்களை வாழ்க்கையில் கண்டுள்ளோம்!

பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.

அதிலும், எதைச் சொல்வாதாயினும் நீங்கள் உங்களது கணவனை அல்லது மனைவியைப் புரிந்துகொண்ட முறையில் அவர்களுக்குப் பொருந்தும் வகையில் அழகாகச் சொல்வது இன்னுமோர் முக்கய விடயம். உதாரணமாக, உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், கல்லாக இருந்தாலும் உங்களைப் புரிந்து கொள்ளும்.

2) தாம்பத்திய உறவில் திருப்தி

எந்த அளவுக்குத்தான் ஒருவரைக் காதலிக்கிறோம் என்று கூறினாலும், நாம் நமது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் கொண்டுள்ள அன்பிலிருந்து கணவன் அல்லது மனைவி மீது கொண்டுள்ள அன்பு குறிப்பிட்ட அளவு காமமும் கலந்த அன்பாகும். இல்லை என்று யாராலும் சொல்லவே முடியாது. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பற்றதாகும். இதில் எந்த வகையில் பிரச்சினைகள் வரலாம்?

இதுபற்றி விரிவாகப் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன். பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.

அத்தோடு அதற்குப் பல்வேறு உத்திகளும், உளவியல் மற்றும் வேறு உடலியல் யுத்திகளும் இருப்பதையும் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான முறையில் திருப்தி காணாத எல்லோரும் இன்னொருவரை நாடிப் போவது என்று சொல்லுவதைவிட எத்தனை பேர் உள்ளுக்குள் தமது உணர்வுகளைப் பூட்டி வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதுவே சில சமயங்களில் மற்றவர் மீது வெறுப்பு உண்டாகவும் காரணமாக அமையலாம்.

3) அன்பும் அரவணைப்பும்

ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.

பொதுவாகப் பிள்ளைகள் என்று ஆனவுடன் மனைவியின் அன்பு பிள்ளைகளுக்கும் செல்வதோடு, வீட்டு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, கணவன் மீது அன்பு காட்டுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது. அதேபோன்று, வேலைத்தளத்தில் வேலைப் பழு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவனுக்கும் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது.

கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை நமது பிரச்சினை போன்று பார்ப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.

அது ஒருபுறம் இருக்க, பொதுவாக நாங்கள் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது, எங்களிடம் உள்ள அனைத்து இரகசியங்களையும் மற்ற நபர் அறிந்து கொள்வது வழக்கம். எப்பொழுதுமே ஒருவர் ஒரு புரியாத புதிராக இருக்கும் பொழுது, அனைவரும் அவருடன் பழக வேண்டும், அவர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொள்வர்.

ஒருவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு, அவரிடம் பேசுவதற்குக் கூட எதுவும் இருக்காது. அத்தோடு, எந்த நபரைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்ட பிறகு அனைவரும், அந்த நபரை இடை போட்டு விடுவார்கள். அதற்குப் பின்னர் அந்த உறவில் சந்தோசம் குறைவாகவே இருக்கும். இதுவே திருமண வாழ்விலும் எமக்குப் பிரச்சினையாக அமையலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. எனினும், மற்றைய நபரின் தன்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது எங்களது கையில்தான் உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்று சொல்ல முடியாது. பின்வரும் சில பழக்க வழக்கங்களைக் கடைப் பிடித்து வந்தால் அவற்றை அடியோடு இல்லாமல் செய்வது என்பதைவிட அவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.

- வாரத்திற்கு ஒரு நாலாவது இருவரும் ஒன்றாய் உண்ணுவது.

- மாதத்திற்கு ஒருமுறையாவது வெளியே சென்று தனிமையில் மனதுவிட்டுப் பேசுவது.

- ஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய முயலாமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது.

- எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருத்தல்.

- ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, நல்ல புரிந்துணர்வுடன் இருத்தல்.

இதுபோன்ற பல வழிமுறைகள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் மேலே குறிப்பிட்டதை விடவும் மேலதிகமான பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சொல்லி அவற்றுக்கான தீர்வையும் சொல்லவே ஒரு ப்ளாக் திறக்கலாம். எனது மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இது எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான பிரச்சினையைக் கடைசியாகச் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். அதுதான் குழந்தை பிறந்த பிறகு அந்தக் குழந்தை இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அழுவதால் வரும் பிரச்சினை. இது பல தம்பதியினரின் உறக்கத்தைப் பறிக்கும் ஒரு மெகா பிரச்சினை. இதற்கு மிக எளிதான ஒரு சூப்பர் ஐடியா கிடைக்கப் பெற்றது. அதையும் பாருங்கள்….