Browse > Home / Archive by category 'நறுக்குகள்'

| Subcribe via RSS

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

October 25th, 2008 | 2 Comments | Posted in நறுக்குகள்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

More »

கவிதைகள்

September 8th, 2008 | No Comments | Posted in நறுக்குகள்

அடி, உதை, குத்துக்கு…
 உடம்பு வலித்தும்
 உள்ளம் வலிக்கவில்லை…
 பேரப்பிள்ளைகளின் செல்லம்?
 
 -உசேன்-
 
 பெண் தெய்வம்
 பயந்து ஓடுகிறது
 எதிரே
 போலிச்சாமியார்!
 
 - ஆர்.ஜெயசீலன், மன்னார்குடி-
 
 அவளுடைய
 இதழ்களும் குறள்தானோ?
 இரண்டே வரியில்
 எத்தனை பாடங்கள்…?
 
 - நெ.இராமன், சென்னை-74-
  More »

The best poem of 2006

August 3rd, 2008 | No Comments | Posted in நறுக்குகள்

This poem was nominated by UN as the best poem of 2006, Written by an African Kid

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you gray

And you calling me colored?

தமிழா! நீ பேசுவது தமிழா…?

August 2nd, 2008 | 1 Comment | Posted in நறுக்குகள்

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

More »

நிறைவு

July 24th, 2008 | No Comments | Posted in நறுக்குகள்

நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

எனக்கு ஏன் மதிப்பில்லை.
நானும் ஒரு கல் தானே என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பரை கூறியது….

ஏ குறுணி. காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்ட பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.ஆனால், இரத்தினக்கல் அப்படியா. நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை.எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.

More »

குனிவு

July 24th, 2008 | No Comments | Posted in நறுக்குகள்

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.

ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து. இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா எப்போது பார்த்தாலும்

மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே…. என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது.

நாம் என்ன செய்ய முடியும். கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும. என்றது மற்ற காக்கை.

More »