Browse > Home / Archive by category 'குட்டிக்கதைகள்'

| Subcribe via RSS

சின்னக் கூடை!

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

More »

மனபலம்

ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.

பேரரசனுக்குப் படை பலம் பெரிது. வலிமை மிக்கது. குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமிக்கவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அதனாலேயே மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.

குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.

‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை சுண்டிவிடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால் போரில் தோற்றுவிடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.

More »

இவையெல்லாம் மாறிவிடும்!

‘‘குருவே, என்னால் வாழ முடியாது. வாழ்க்கையே துன்பமாய் மாறிவிட்டது’’ என்றான் ஒருவன்.

‘‘அப்படியா?’’ அமைதியாகக் கேட்டார் குரு.

‘‘ஆமாம். முன்பு என் வாழ்க்கை இனிமையாக இருந்தது. எந்தக் கஷ்டமும் இல்லை. நிம்மதியாக இருந்தேன். இப்போது நான் எது செய்தாலும் தப்பாகவே முடிகிறது. வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் சந்தோஷம் இல்லை. வாழ்க்கையே சோகமாகிவிட்டது’’.

More »

அப்போ உனக்கு மூணு வயசு!

October 5th, 2008 | 1 Comment | Posted in குட்டிக்கதைகள்

மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை. எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் வெடித்து விட்டான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ கத்தினான்.

தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.

More »

கண்ணதாசனின் குட்டிக்கதை!

கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது.

சோடா உடைக்கப்பட்டது.

விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது-

‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’
சோடா பதில் சொன்னது-

‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’

ஐ லவ் யூ மம்மி!

September 30th, 2008 | 2 Comments | Posted in குட்டிக்கதைகள்

வீட்டுக்குள் நுழைந்த தாய்க்குக் கோபம் தலைக்கேறியது.

வீட்டு வரவேற்பறை முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பன்கள் என துண்டு துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்துவிட்டான். கையில் அழகான பெட்டி.

‘‘அம்மா, இது உங்களுக்காக நான் செஞ்சது’’ என்று ஓர் அழகான பெட்டியைக் காட்டினான்.

More »