Browse > Home / Archive by category 'காதலர் பக்கம்'

| Subcribe via RSS

பொம்மிம்மா!

June 22nd, 2008 | 5 Comments | Posted in காதலர் பக்கம்
பொம்மிம்மா!

என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!

பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!

More »

கமுக்கமாய் காதலி!

June 22nd, 2008 | 6 Comments | Posted in காதலர் பக்கம்
கமுக்கமாய் காதலி!

சின்ன வயதில்… உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால், அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே, அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன்.

சேச்சே!  டேய் அவளோடதை அவளிடமே கொடுத்து விடு!? என்று அப்போ சொல்வது மாதிரியே இப்போதும் உன் அம்மா சொல்லி விட்டால்? என்றாய் அழகு காட்டி.

கண்டிப்பா அப்படித்தான் சொல்வேன்! என்று திடீரென கதவுக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தார் என் அம்மா.

அய்யய்யோ… அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க! என்றாய் அதிர்ச்சியோடு!

More »

நான் நலமில்லை… நீ?

June 22nd, 2008 | 3 Comments | Posted in காதலர் பக்கம்
நான் நலமில்லை... நீ?

பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,  ?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என் அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!? என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது… என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு மோகினியைப் போல நீ காத்திருப்பாய் என்று!

More »

சீர் கொண்டு வா..!

June 22nd, 2008 | 2 Comments | Posted in காதலர் பக்கம்
சீர் கொண்டு வா..!

நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ… யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது… என்று கத்துவேன் நான் | கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே… என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.

ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு! என்பேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்… என்பாய் நீ.

More »

வெட்கம்

June 22nd, 2008 | 3 Comments | Posted in காதலர் பக்கம்
வெட்கம்

வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல், பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன். பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும், ??அய்யோ… கையை விடுங்க. வெக்கமா இருக்கு? என்று நெளிந்தாய்.

வலிக்குதுனு சொல்லு! அதிலே நியாயம் இருக்கு… வெக்கமாத்தானே இருக்கு. அதுக்கு ஏன் கையை விடணும்? ஆமா, வெட்கப்படறது உனக்குப் பிடிக்காதா? என்றேன்.
ம்ம்ம்… வெக்கப்பட எந்தப் பொண்ணுக்காவது புடிக்காம இருக்குமா? என்றாய் வெட்கம் பொங்க.

பிடிச்சிருக்குன்னா, ஏன் விடச் சொல்லணும்? அய்யோ… வெக்கமா இருக்கு. அப்படியே கையைப் பிடிச்சிட்டே இருங்கனுதானே சொல்லணும் நீ!? என்றேன்.

சிரித்து விலகிய நீ, அதெல்லாம் லூசுப் பொண்ணுதான் சொல்வா!? என்றாய்.

அப்போ நீ லூசு இல்லையா?? என்றேன்.

More »

சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!

June 22nd, 2008 | 6 Comments | Posted in காதலர் பக்கம்
சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!

சிவபெருமானைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது! என்றேன் எரிச்சலுடன்.

பார்றா… கடைசியில் அவர் தலையிலும் கை வெச்சுட்டியா…ஆமா, அவர்

மேல அப்படி என்ன உனக்குப் பொறாமை? என்றாய்.

தன் உடலில் பாதியை அவர் தன் மனைவிக்குக் கொடுத்த மாதிரி, என் உடலில் சரிபாதியை உனக்குக் கொடுக்க ஆசை. ஆனால், என்னால் முடியவில்லையே. அதான்!

அதனாலென்ன… நீதான் உன் இதயத்தையே எனக்குக் கொடுத்துவிட்டாயே!

என்ன பெரிய இதயம்… அது என் கையளவு கூட இருக்காதே…

More »