Browse > Home / Archive by category 'பெண்ணுலகம்'

| Subcribe via RSS

உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?

March 28th, 2009 | No Comments | Posted in பெண்ணுலகம்

எல்லோருக்கும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு சில டிப்ஸ்:

* இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள்.

* ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு - இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசவும். தொடர்ந்து 2 வாரங்கள் இப்படி செய்து வந்தாலே போதும். முகம் பளபளக்க ஆரம்பித்து விடும்.

More »

உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவைப்பட்டால்…?

March 21st, 2009 | No Comments | Posted in பெண்ணுலகம்

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந் தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில்லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…

1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள்

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கி றார்கள். ஆனால் அங்கே சரியான நபரைக் கண்ட பிறகு நேரே போய் பேசிவிடுகிறார்களா என்ன? ஜாடைமாடையாகப் பார்க்கிறார்கள், புன்னகைக் கிறார்கள், கிசுகிசுக்கிறார்கள்… ஆனால் ஓரக்கண்ணால் பார்ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிடலாமே? நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றால் உங்கள் தோழியையோ, உறவினரையோ தூது செல்லப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
More »

நீங்கள் நல்ல மனைவிதானா?!

February 8th, 2009 | No Comments | Posted in பெண்ணுலகம்
நீங்கள் நல்ல மனைவிதானா?!

- உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’

நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம்.

1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன்.

ஆ. என்ன விஷயம் என்று கேட்டு, அதற்கான தீர்வு சொல்வேன்.

இ. கண்டு கொள்ளவே மாட்டேன்.

More »

Tags: , , ,

படுக்கையறையில் `கவர்ச்சியாக’ திகழ…

October 16th, 2008 | 1 Comment | Posted in பெண்ணுலகம்

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது.

மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?

சில டிப்ஸ்…

`செக்ஸி’யாக உணருங்கள்

சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்’ செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.

More »

பெண்களில் 7 வகை

September 29th, 2008 | 2 Comments | Posted in பெண்ணுலகம்

1. 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமிகள் `பேதை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

2. 8 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறுமிகளை `பெதும்பை’ என்று கூறுவார்கள்.

3. 12 முதல் 13 வயது வரையுள்ள சிறுமிகள் `மங்கை’.

4. 14 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் `மடந்தை’.

5. 20 முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் `அரிவை’.

6. 26 முதல் 31 வயது வரையுள்ள பெண்கள் `தெரிவை’.

7. 32 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் `பேரிளம் பெண்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

விஜயலட்சுமி, நெல்லை-

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது

September 17th, 2008 | No Comments | Posted in பெண்ணுலகம்

அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

More »