Browse > Home / Archive by category 'குட்டிக்கதைகள்'

| Subcribe via RSS

மிஸ்டர் எக்ஸ் அனுப்பிய மின்னஞ்சல்

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

More »

”கனவுகள் - ஒரு கதை”

பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம் ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள்.  தினந்தோறும் இந்தக் கனவு தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள். நிம்மதி இன்றித் தவித்தாள். அன்றைக்கும் அதே கனவு. அதே பங்களா, அதே மிருகம் துரத்த, மூச்சு இரைக்க ஓடினாள்.  ஒரு மூலையில் அவள்ஒடுங்கிக் கொள்ள, அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது.

பயத்தில் உறைந்துபோன அவள் அந்த மிருகத் திடம் கேட்டாள்… ”யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்னை எதற்காகத் துரத்துகிறாய்? இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்?”

அந்த மிருகம் அவளிடம் அமைதியாகச் சொன்னது…”எனக்கெப்படித் தெரியும்? இது உன் கனவு!”

- ஜி.லட்சுமிபதி, சென்னை.

Tags:

அனுபவம் தரும் பாடம்

November 15th, 2008 | 1 Comment | Posted in குட்டிக்கதைகள்

புத்தர் சீடர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த அனுபவம் இது. ஆனந்தன் என்பது அவர் பெயர். ஒருநாள் பொட்டல்காடு வழியே ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நாக்கு வறண்டதால் பருக தண்ணீர் கிடைக்குமா? என்று தேடினார். அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்றார்.

அப்போது சிறிது தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக் கண்டார்.

More »

ஜென் கதை

November 14th, 2008 | No Comments | Posted in குட்டிக்கதைகள்

ஜிங்ஜுவுக்கு பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும் அவனிடம் கோபம்தான்.

அவன் தாயாரும் ஜிங்ஜுவின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று. முடிவு கடுகளவும் பிரயோஜனம் தரவில்லை.

அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங்ஜுவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.

More »

பலூன்காரர்

November 3rd, 2008 | 1 Comment | Posted in குட்டிக்கதைகள்

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள்.

அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

More »

சின்னக் கூடை!

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

More »