ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! - உணர்ச்சிக் கவிதை!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!







