Browse > Home / Archive by category 'வாழ்க நலமுடன்'

| Subcribe via RSS

நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

January 31st, 2010 | No Comments | Posted in வாழ்க நலமுடன்

‘நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்’ - இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கலரைச்சொல் லுங்கள்.உங்களைப்பற்றிச் சொல்லு கிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்…

வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!

More »

ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

March 27th, 2009 | No Comments | Posted in வாழ்க நலமுடன்

அளவான உணவு, தேவையான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவை ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமானவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. உடல் நலனில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வதிலும், முறையான உணவு பழக்க வழக்கங்களிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மற்றவர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் அவர்களது நடுத்தர வயதில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்க உதவும் வழிமுறைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்றது.
More »

குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள்…

March 25th, 2009 | 1 Comment | Posted in வாழ்க நலமுடன்

இன்றைய வாழ்க்கை அவசரம் நிறைந்தாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு என்று தனித்தனி கவலைகளுடன் பயணம் செய்யும் காலகட்டம் இது. கணவன்-மனைவி இருவரும் வேலைபார்த்தால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளதால் ஒட்டு மொத்த குடும்பமே பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாத நிலை பரவலாக உள்ளது. இதனால் தடம் மாறும் குழந்தைகளும் பலர் உள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும், வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக நல்லவர்களாக வளரவும் உதவும் வழிமுறைகள் குறித்தும், அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழக மனநல ஆய்வாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினார்கள்.

More »

கவலையை விரட்டுங்கள்

March 24th, 2009 | 1 Comment | Posted in வாழ்க நலமுடன்

கவலை மகிழ்ச்சிக்கு எதிரி. கவலைக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போகும். அதை தவிர்க்க சாதுர்யம் அவசியம்.

கவலை ஏன் வந்தது? அதை தீர்க்க வழி என்ன? என்று புரியாமல் கவலையை வளர்த்து பலர் மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். மேலும் பலர் தவறான வழிகாட்டுதல்களால் மது, மாதுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் திருட்டு, வஞ்சகம், குறுக்குவழி என திசைமாறிப் போகிறார்கள்.

More »

கோபம் சாபமானால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

March 23rd, 2009 | No Comments | Posted in வாழ்க நலமுடன்

ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண் டிருப்பான்.

ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், “ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித் திருக்கிறாய்? ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கிண்டல் செய்தாள்.

More »

கத்தாதீர்கள்… கவனியுங்கள்..!!

March 22nd, 2009 | No Comments | Posted in வாழ்க நலமுடன்

நெருங்கிய உறவான கணவன்- மனைவிக்கிடையே வார்த்தைகள் தடிப்பதற்கும், பிரச்சினைகள் வெடிப்பதற்கும் சூழல் ஒரு முக்கியக் காரணமாகிறது. எந்தெந்தச் சூழலில் எப்படி நடக்கலாம் என்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே…

சூழ்நிலை 1: அலுவலகத்தில் அன்று உங்களுக்குப் போதாத வேளை. அதே வெறுப்புடன் வீட்டுக்கு நீங்கள் வருகிறீர்கள். துணையிடம் அந்தக் கோப வெறுப்பைக் காட்டுகிறீர்கள்.

ஏன் இப்படி…?: அலுவலகப் பணியில், தொழிலில் ஏற்படும் எந்த நெருக்கடியும் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு மனிதனும் தனது அலுவல் ரீதியான மனநிலையிலிருந்து உடனடியாகத் தனிப்பட்ட வாழ்க்கைக்கான மனநிலைக்கு மாற வேண்டியுள்ளது.

More »