Browse > Home / Archive by category 'சிறு கதைகள்'

| Subcribe via RSS

சொந்தம் (மினி கதை)

June 23rd, 2008 | 3 Comments | Posted in சிறு கதைகள்

காலம்: மாலை
இடம்: வீடு

சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ!
சரி சரி வாங்கோ சாப்பிட…!
இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை போய் இருங்கோ.

காலம்: இரவு - இடம்: படுக்கையறை

சீதா: அது என்ரை தலையணை இங்க தாங்கோ.

More »

மாதவனின் ரசிகை!

June 23rd, 2008 | No Comments | Posted in சிறு கதைகள்

ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு.

வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை மேடி… மேடி… என்று ஜெபம் செய்வதும் சோ சுவீட் என்று அவர் படத்துக்கு முத்தமிடுவதும்… சே!
அந்த ஏ.சி. டூ டயர் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென்று நேருக்கு நேர் தன் கனவு ஹீரோ மாதவனைப் பார்த்தவுடன் ரம்யாவுக்குத் தலைகால் புரியவில்லை.

More »

திருமணம் ஆனால் திருந்திவிடுவான்!

June 23rd, 2008 | 2 Comments | Posted in சிறு கதைகள்

என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி.

சரிம்மா! சத்தியமா இனி குடிக்க மாட்டேம்மா!

உங்கப்பா செய்யாத சத்தியமாடா? முத நாளு ராத்திரி சூடம் கொளுத்திச் சத்தியம் பண்ணிட்டு, மறு நாளு காலையிலேயே தள்ளாடிட்டு வருவாரு. உன் பேச்சையெல்லாம் என்னால நம்ப முடியாதுடா! நீ இன்னிக்கே குடியை நிறுத்தற டாக்டர்கிட்ட வர்றே!

More »

மல்லிகைப்பூ சினேகா!

June 23rd, 2008 | No Comments | Posted in சிறு கதைகள்

அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது.

சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே… வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்!
என்றார் சினேகா.

சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை… ஆர்வம்!

அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு வந்தாள். அவளிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, பூவை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டு, சினேகா சொன்னார்…

அந்தப் பொண்ணு பத்தாவது படிக்கிறா சார்! ஸ்கூல் பீஸ் கட்டணும்னு ஒருநாள் வந்தா. பணம் கொடுத்தேன். ஆனா, ?உழைக்காமல் காசு வாங்கறது தப்பு. தினமும் என்கிட்டே பூ வாங்கிக்கோங்க?னு சொன்னா. எனக்கும் தொடர்ந்து உங்க ஷ?ட்டிங்கில் தினமும் பூ வெச்சுக்கிட்டு வர்ற மாதிரி கேரக்டர்தானே… அதான், நீங்க வாங்கற பூவை நானே வாங்கி, இந்தப் பொண்ணுக்கு உதவறதா முடிவு செய்தேன்!

புரொடக்ஷன் மேனேஜர் பார்வையில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் சினேகா.

எம்.எஸ்.தீபன்-

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

June 23rd, 2008 | 1 Comment | Posted in சிறு கதைகள்

எடுத்துக் கொள் இதயத்தை - என்
மார்புக்குள் கை விட்டுத் தேடு
திருடிக்கொள் என் சொத்தை - இது
தீ இன்றி எரிகின்ற காடு… - சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது!

இது முதலில் என் மகள் ஜனனி பாடுவதாக இருந்தது. ஜனனி பாடின டிராக்கைக் கேட்டு அசந்துட்டார் ரஹ்மான் சார். இப்போதைக்கு வேற யாரையும் வெச்சுப் பாட வைக்க வேணாம்னு சொல்லிட்டிருந்தார்.

எனக்கென்னவோ ஜனனி பாடினதையே ஓகே பண்ணிடுவார்னு தோணுது! என்று ரஹ்மானின் உதவியாளர் சொன்னதைக் கேட்டு, வானத்தில் பறந்தேன். ஆனால், அதே பாட்டு இப்போது சாதனா சர்க்கம் குரலில்! என்ன ஆச்சு?

ரஹ்மானின் உதவி யாளரிடம் விசாரித்தேன். குரல் ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் ஹிட் ஆகிடும். ஆனா, இது கொஞ்சம் செக்ஸியான பாட்டா இருக்கு. அதுக்கப் புறம் பன்னிரண்டு வயசு ஜனனிக்கு இது மாதிரியான பாட்டாவே கொடுத்து செக்ஸி பாடகினு முத்திரை குத்திடுவாங்க. அதனால வேற ஒரு நல்ல பாட்டு வர்றப்போ ஜனனியைப் பயன்படுத்திக்க லாம்னு சார் சொல்லிட்டார்! என்றார் அவர்.

ரஹ்மானின் உயர்ந்த மனதைக் கண்டு நெகிழ்ந்தேன்.

ஜி.ரமேஷ்-

எங்கே போனார் கனல் கண்ணன்?

June 23rd, 2008 | No Comments | Posted in சிறு கதைகள்

ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? - டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! - அவர் சொல்லி முடிப்பதற்குள்,

அது எனக்குத் தெரியும். லைட்டுக்குத் தெரியாதே!  அது இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல தாங்காது. ஷட்டிங் கேன்சல்! - எரிச்சலோடு சொன்னார் பாபு.
இல்லை பாபு… ஒண்ணரை மணி நேரத்துக்குள்ள முடிச்சுடலாம்!

More »