70 கிலோ எடை..
ஒருவர்: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…?
நண்பர்: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…
ஒருவர்: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…?
நண்பர்: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…
இது நான் படித்த ஜோக். ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான்.
கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்.
கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண…
சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ் (எலி)” இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம் பண்ணப் போறான் போல கிடக்கு.
-ரவிசெல்லத்துரை, சுவிஸ்-
அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி!
நரகம்னா என்ன?
அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’
-ஆர். மணி, நெல்லை-
TEACHER: Maria, go to the map and find North America …
MARIA: Here it is.
TEACHER: Correct. Now class, who discovered America ?
CLASS: Maria.
TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN: You told me to do it without using tables.
புலம் பெயர்ந்து நாடுகள் மாறி அகதிகள்போல் வாழப் பிடிக்கும்!
சோசல் காசை எடுத்துக் கொண்டு களவாய் வேலை செய்யப் பிடிக்கும்!
கோலா ரின்னில விஸ்கி கலந்து பார்க்கில் இருந்து அடிக்கப் பிடிக்கும்!
விழாக்களின்போது வாசலில் நின்று கும்பலாக பேசப் பிடிக்கும்!
புடிக்கும் சீட்டில் முதல் சீட்டை எடுத்துக்கொண்டு மாறப் பிடிக்கும்!
ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புறங் கூறி பேசப் பிடிக்கும்!